மலேசியா முகாபேயிக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது, ஹரப்பான் இளைஞர் பிரிவு கூறுகிறது

 

முற்றுகையிடப்பட்டுள்ள ஜிம்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபேயிக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று ஹரப்பான் இளைஞர் தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார்.

93 வயதான அவர் மலேசியா அல்லது சிங்கப்பூரில் அடைக்கலம் தேடக்கூடும் என்ற ஓன்லைன் செய்திகள் மீது கருத்துரைத்த நிக் இவ்வாறு கூறினார்.

இதில் உண்மை இல்லை என்று நம்புவோம். ஆனால், உண்மையானால் மலேசிய அரசாங்கம் அவருக்கு அவ்வாறு செய்ய அனுமதி கொடுக்கக்கூடாது என்று இன்று மதியம் வெளியிட்ட ஓர் ஊடகச் செய்தில் நிக் கூறினார்.

மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிட் அவரை மருத்துவ சிகிட்சைக்காக மலேசியாவுக்கு வர அனுமதிக்கும் என்று கூறியிருந்தது குறித்து நிக் ஏமாற்றம் தெரிவித்தார்.

ஜிம்பாப்வேயில் மக்களாட்சி மலர்வதைத் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் மலேசியா உதவைக்கூடாது என்று கூறிய நிக், முகாபேயின் விதியை ஜிம்பாப்வேயின் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் என்றார்.