2018 பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசாங்கம் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டது

இன்றிரவு நாடாளுமன்ற மக்களவையில் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அளித்த வாக்காள் அரசாங்கம் கிட்டத்தட்ட தோல்வி கண்டது.

2018 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவுகள் மற்றும் பயணீட்டாளர் அமைச்சின் பகுதிக்கான நாடாளுமன்ற குழு அளவிலான விவாதத்தை முடித்துக்கொள்ளும் வேளையில், ஜி. மணிவண்ணன் (பிகேஆர்-காப்பார்) வாக்களிப்பு நடத்தக் கோரினார்.

அந்த நேரத்தில், மக்களவை கிட்டத்தட்ட காலியாக இருந்தது, பெரும்பாலான பிஎன் உறுப்பினர்கள் அவையில் இல்லை.

மக்களவையின் துணைத் தலைவர் ரொனால்ட் கியன்டி மக்களவையின் மணியோசையை இரண்டு நிமிடங்களுக்கு எழுப்ப உத்தரவிட்டார். பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓடிவந்தனர்.

கடுமை ஆட்கொண்ட சில நிமிடங்களுக்குப் பின்னர், வாக்கெடுப்பில் பிஎன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, 52 ஆதரவு மற்றும் 51 எதிர்ப்பு வாக்குகள். இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அந்த ஒரு வாக்கு பெரும்பான்மையை பிஎன்னுக்கு அளித்தவர் மக்களவையின் துணைத் தலைவர் இஸ்மாயில் முகமட் சைட். அவர் கோல கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியின் அடிப்படையில் அவரது வாக்கை அளித்தார்.