மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

சுமார் 8 ஆண்­டு­க­ளின் பின்­னர் இந்த ஆண்டு மாவீ­ரர் வாரம் தாயக மண்­ணில் மீண்­டும் புதுப்­பொ­லி­வு­டன் சுடர்­விட ஆரம்­பித்­துள்­ளது.தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் 2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்­கா­ லில் மௌ னித்த பின்­னர் மாவீ­ரர் நினைவேந்­தல் வாரத்தை வடக்கு, கிழக்­கில் தமிழ் மக்­கள் பகி­ரங்­க­மாக நினை­வு­கூ­ர­மு­டி­யாத நிலமை ஏற்­பட்­டி­ருந்­தது.

7 வரு­டங்­க­ளின் பின்­னர் கடந்த வரு­டம் முதல் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் வடக்கு, கிழக்­கில் தமி­ழர் தாய­கத்­தில் பகி­ரங்­க­மாக நினை­வு­கூ­ரப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்­னார் ஆகிய வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லும் மற்­றும் திரு­கோ­ண­ மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் இம்­முறை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

இதற்­காக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைந்­துள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் பொது­மக்­க­ளால் துப்­பு­ரவு செய்­யப்­பட்­டடு வரு­கின்­றன.அதே­வேளை, வடக்கு, கிழக்­கின் பொது­வான இடங்­க­ளி­லும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள் இன்று பகி­ரங்­க­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்து தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­கா­கப் போர்க்­க­ள­மாடி வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­காக நவம்­பர் மாதம் 21ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திக­தி­வரை மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

தமி­ழர் தாய­கத்­தி­லும், புலம்­பெ­யர் தேச­மெங்­கும் இன்று ஆரம்­ப­மா­கும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் எதிர்­வ­ரும் 27ஆம் திகதி நடை­பெ­றும் முதன்மை நிகழ்­வு­டன் முடி­வ­டை­யும்.

-puthinamnews.com

TAGS: