ஃபாமா : காய்கறிகள் விலை ஏற்றம் தற்காலிகமானது

பினாங்கு, கெடா போன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், இலை வகை காய்கறிகள் தங்குத் தடையின்றி கிடைக்கும் என, மத்திய வேளாண்மை விற்பனை ஆணையம் (ஃபமா) உத்தரவாதம் அளித்துள்ளது.

உண்மையில், காய்கறிகளின் விலை உயர்வைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  ஃபாமா கடைகளுக்கு உடனடியாக காய்கறிகள் அனுப்பப்படும்  என ஃபமா தலைவர் பத்ருதின் அமிருல்டின் தெரிவித்தார்.

“பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், கடுகுக்கீரை, தண்டுக்கீரை போன்ற இலை காய்கறிகளின் விலையானது 30% அதிகரித்துள்ளது, இந்த விலையேற்றம் தற்காலிகமானது,” என்றும் அவர் மேலும் சொன்னார்.