டச்சு மாடல் அழகியின் குடும்பத்தார் இண்டர்போல் உதவியை நாடினர்

கடந்த வியாழக்கிழமை   ஜாலான் டாங் வாங்கி அடுக்குமாடி கட்டிடத்தின் 20-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து   கிடந்த    டச்சு மாடல் அழகி இவானா எஸ்தர் ரோபர்ட் ஸ்மித்தின்   இறப்பு   குறித்து  இண்டர்போல்   விசாரணை    நடத்த   வேண்டும்    என  மலேசியாவில்   உள்ள    டச்சுத்    தூதரகம்   கேட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த    19வயது   மாடல்    அழகியின்    இறப்பில்     அவரின்    குடும்பத்தார்   ச்ந்தேகம்   கொள்வதை   அடுத்து   தூதரகம்    இண்டர்போல்   உதவியை   நாடியுள்ளது.

அக்கட்டிடத்தின்   20வது   மாடியிலிருந்து   விழுந்த   இவானாவின்  உடல்   6-ஆவது மாடியின் பால்கனியில், நிர்வாண கோலத்தில்    கண்டெடுக்கப்பட்டது.  அவர்  கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம்   எனப்  போலீஸ்   தெரிவித்தது.

ஆனால்,  இவானாவின்  தந்தை  மெர்சல்  ஸ்மித்,  20வது   மாடியிலிருந்து   தம்  மகள்   பிடித்துத்   தள்ளப்பட்டிருக்க   வேண்டும்  என்று   நம்புவதாக  டச்சு    செய்தித்தாள்கள்   தெரிவித்துள்ளன.  மகளின்   கழுத்தில்   சில   காயங்கள்  இருப்பதாக   அவர்   கூறிக்கொண்டார்.

“இத்தகவலை  மலேசிய   போலீசார்  பொருள்படுத்துவதாக    தெரியவில்லை.  அவர்கள்  வழக்கை   முடிப்பதில்   அவசரம்  காட்டுகிறார்கள்.

“எங்களுக்குத்   தேவை   நீதி”,  என்றவர்   சொன்னதாக   அறிவிக்கப்பட்டுள்ளது.