நஜிப் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்

 

வேலை நிமித்தம் பிரதமர் நஜிப் ரசாக் சவூதி அரேபியாவுக்கு ஐந்து நாள் வருகை மேற்கொண்டு நாளை புறப்படுகிறார். ஜனவரி 12 வரையில் அங்கு வேலையில் இருப்பார். அங்கு அவர் அரசர் சால்மன் பின் அப்துல்லாஸீஸ் அல் சாவுட்டைச் சந்திக்கிறார்.

பிரதமருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளும் செல்கின்றனர்.

இச்சந்திப்பின் போது இருதரப்பு, பலதரப்பு, வட்டாரம் மற்றும் உலகப் பிரச்சனைகள் குறித்து அவர்கள் கருத்துப் பறிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், சவூதி அரேபிய மன்னர் மலேசியாவுக்கு வருகையளித்திருந்த போது ஒப்புக்கொள்ளப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசப்படும் என்று மலேசிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

மேலும், பிரதமரின் சவூதி அரேபியா வருகை இருநாடுகளுக்கும் இடையிலான நட்பின் பந்தத்தை வலுப்படுத்தும் என்றும் மலேசிய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.