ஆயர் ஈத்தாமில் அமனா வேட்பாளர் டிஏபி சின்னத்தில் போட்டி?

அமனா   வேட்பாளர்  ஒருவர்  டிஏபி-க்கு   ஒதுக்கப்பட்ட   ஆயர்  ஈத்தாம்   நாடாளுமன்றத்   தொகுதியில்   போட்டியிடலாம்    என்று  கூறப்படுகிறது..   அப்படி  போட்டியிடும்  அவர்  டிஏபி   சின்னத்தைத்தான்  பயன்படுத்துவாராம்

ஆயர்  ஈத்தாம்    மசீச  துணைத்   தலைவர்   வீ  கா   சியோங்கின்   தொகுதி  என்பதால்   பிஎன்னுக்கு   ஒரு  முக்கியமான    தொகுதியாகும்.

இதன்   தொடர்பில்   பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லியை   வினவியதற்கு   கட்சிகளுக்கிடையில்   சமரசம்  உண்டாக்கும்  நோக்கில்   அப்படி   ஒரு  பரிந்துரை   முன்வைக்கப்பட்டதாகக்  கூறினார்.

அமனா  துணைத்   தலைவர்   சலாஹுடின்   ஆயுப்பிடம்   வினவியதற்கு    அவர்   மறுமொழி  அளிக்கத்    தயங்கினார்.

“இப்போதைக்கு  அதை  உறுதிப்படுத்த   முடியாது”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

ரபிசி,  சலாஹுடின்   இருவருமே   இட ஒதுக்கீடு   பேச்சுகளில்   கலந்துகொண்டவர்கள்.

பேச்சுகளின்   தொடக்கத்தில்,   பிகேஆரின்  செகாமாட்   தொகுதிக்காக   டிஏபி  இரண்டு   நாடாளுமன்றத்   தொகுதிகளை   பெர்சத்துவுக்கு   விட்டுக்கொடுக்க  முன்வந்தது    என  ரபிசி    கூறினார்.

செகாமாட்  2013வரை   டிஏபி   தொகுதியாகத்தான்   இருந்து  வந்தது. 2013-இல்  கேளாங்  பாத்தா   தொகுதிக்குப்   பதிலாக   செகாமாட்டை   அது  பிகேஆரிடம்   கொடுத்தது.  கேளாங்  பாத்தாவில்  டிஏபி   பெருந் தலைவர்   லிம்  கிட்  சியாங்   போட்டியிட்டு  வென்றார்..