1எம்டிபி கணக்கறிக்கை இரகசியமானதல்ல என்று அறிவிக்கக் கோரும் அஸ்மின் முயற்சி தோல்வி

கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்,     தலைமைக்   கணக்காய்வாளரின்  1எம்டிபிமீதான   கணக்குத்  தணிக்கை  அறிக்கையை  ஓர்  இரகசிய  அறிக்கை  அல்ல   என்று  அறிவிக்க   வேண்டும்  எனக்  கோரி  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்   அலியும்   முன்னாள்   அம்னோ   உறுப்பினர்    ஜாஹிட்  முகம்மட்  அரிப்பும்  செய்து  கொண்ட  விண்ணப்பத்தை  நிராகரித்தது.

அஸ்மினுக்கும்   ஜாஹிட்டுக்கும்   அந்த   அறிக்கையின்  இரகசியத்தன்மையை   அகற்றக்  கோரும்  சட்டப்படியான   தகுதியுரிமை    கிடையாது  என  நீதிபதி   கமாலுடின்  முகம்மட்  சைட்    தீர்ப்பளித்தார்.

1எம்டிபி  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)வுக்காக    தயாரிக்கப்பட்டது,  பொதுமக்களின்   பார்வைக்காக    அல்ல  என்றாரவர்.