காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விரைவில் நடைமுறைக்கு வரும்: ரணில் விக்ரமசிங்க

காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலக சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கூறியுள்ளதாவது, “காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலக சட்டத்திற்கு அரசாங்கம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது நடைமுறைப்படுத்துவதற்கு தயார் நிலையில் அந்தச் சட்டம் உள்ளது. வடக்கில் உள்ள மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

வடக்கில் உள்ள, கணவனை இழந்த பெண்களுக்கு, தேவையான உதவிகளை வழங்கி அவர்களை வலுப்படுத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது. வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேவை என்பதையும் அரசாங்கம் அறியும். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: