கண்ணீர் வடிய வசந்தபிரியாவின் இறுதிச் சடங்கு

 

பினாங்கு, நிபோங் திபாலுள்ள அவரின் வீட்டில் எம். வசந்தபிரியாவின் இறுதிச் சடங்கில் 1,000 க்கு மேற்பட்டோர் கண்ணீர் வடிய கலந்து கொண்டனர். தற்கொலை செய்துகொள்ள அவர் எடுத்துக்கொண்டு முயற்சியின் விளைவாக ஏற்பட்ட காயங்களுக்கு அவர் பலியானர்.

அங்கு குழுமியிருந்தவர்களில் அந்த ஒன்றாம் பாரம் மாணவியின் சகமாணவர்களும் அடங்குவர்.

பிராத்தனைகள் முடிவுற்ற பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது சவப்பெட்டி பிற்பகல் சுமார் மணி 2 அளவில் ஜாலான் சங்காட்டிலுள்ள ஹிந்து மயானத்திற்கு ஒரு காரில் எடுத்துச் செல்லப்பட்டது.

பள்ளிச் சீருடை அணிந்திருந்த வசந்தபிரியாவின் நண்பர்களில் சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அவரின் தந்தை ஆர். முனியாண்டி தாங்கொணாத் துயருடன் சவ வாகனத்தின் பின்னால் நடந்து சென்றார்.

அவர் நடந்து கொண்டிருக்கையில், ஐயா, கணேசா, நான் அவளை (வசந்தபிரியாவை) இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்று தமிழில் கூறியது கேட்கப்பட்டது.

ஐ-போனை திருடிவிட்டதாக அவரது ஆசிரியரால் குற்றம் சாட்டப்பட்ட வசந்தபிரியா நேற்று அதிகாலை மணி 3.30 அளவில் செபறாங் பிறை மருத்துவமனையில் மரணமுற்றார்.