நஜிப் : ஜிஇ14 – ஜூலை 14-ம் தேதிக்குள் நடைபெறலாம்

நாட்டின் 14-வது பொதுத் தேர்தல், ஜூலை 14-ம் தேதிக்குள் நடைபெறலாம் எனப் பிரதமர் நஜிப் இன்று கோடி காட்டினார்.

மெக்காவுக்குச் செல்வதற்கு முன்னதாக, யாத்ரீகர்கள் 2 ‘பெருநாள்கள்’-ஐக் கொண்டாடுவர் என்றும் அவர் சொன்னார்.

“ஜூலை 14 என்றால், 2 நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடும். ஒன்று ஹரி ராயா அய்டில்ஃபிட்ரி மற்றும் இன்னுமொரு ‘பெருநாள்’. நாங்கள் அதனை முன்னதாகவே நடத்திவிடுவோம், உங்கள் இதயத்தில் பதியவைக்க,” என்றார் அவர்.

இன்று புத்ரா பள்ளிவாசலில், “நமது அரசாங்கம் தொடர்ந்து நிலைத்திருந்தால், இந்தப் புனித யாத்திரையை நீங்கள் நன்றாக, வசதியாக முடிப்பீர்கள்,” என்று 1,200 ஹஜ்ஜு யாத்ரீகர்களுக்கு, 1எம்டிபி அறக்கட்டளையின் நிதியுதவி கடிதத்தை வழங்கிய போது அவர் பேசினார்.

பிஎன் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம், ஜூன் 24-ம் தேதியோடு முடிவடையும், அத்தேதிக்குப் பின்னர், 60 நாட்களுக்குள் ஜிஇ14 நடத்தப்பட வேண்டும்.

கடந்த நவம்பர் 26-ல், துணைப் பிரதமர் அஹ்மட் சாஹிட் ஹமிடி ஜிஇ14, சீனப் புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் என்று கூறியிருந்தார்.