இபிஎப் ஈவுத் தொகைக்கும் ஜிஇ 14-க்கும் சம்பந்தமில்லை -சாலே

அண்மையில்  தொழிலாளர்  சேமநிதி  (இபிஎப்)   ஈவுத்  தொகை – கடந்த  20  ஆண்டுகளில்  மிகப்   பெரிய  ஈவுத்தொகை   இதுதான் – அறிவித்ததற்கும்   14வது   பொதுத்   தேர்தலுக்கும்  சம்பந்தமில்லை   எனத்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே  சைட்   கெருவாக்   கூறினார்.

அறிவிக்கப்பட்ட    மாத்திரத்தில்     எதிர்க்கட்சிகள்   அதைத்  “தேர்தல்கால   ஈவுத்தொகை”    என்று     கூறியிருப்பதும்   எதிர்பார்க்கப்பட்ட   ஒன்றே   என்றாரவர்.

“இபிஎப்  ஈவு    விகிதம்   இவ்வாண்டில்   மட்டுமல்ல    கடந்த   சில    ஆண்டுகளாகவே   படிப்படியாக    அதிகரித்து  வந்ந்துள்ளது.

“2014இலும்  2015-இலும்  2013இல்- அதுவும்   தேர்தல்   ஆண்டுதான் –   கொடுக்கப்பட்டதைவிட   கூடுதல்   ஈவுத்  தொகை     அறிவிக்கப்பட்டது.  எனவே  இதற்கும்   தேர்தலுக்கும்   எந்தத்  தொடர்புமில்லை”,  என  சாலே   நேற்றிரவு  அவரது   வலைப்பதிவில்    கூறினார்.