அஸ்மின்: பாஸை இனியும் சகித்துக்கொள்வதற்கில்லை

வரும்  பொதுத்  தேர்தலில்  பாஸுடன்  ஒத்துழைப்பு  இல்லை   என்று   சிலாங்கூர்   மந்திரி  புசார்   முகம்மட்  அஸ்மின்  அலி  மீண்டும்   வலியுறுத்தியிருப்பதாக    நன்யாங்   சியாங்   பாவ்   அறிவித்துள்ளது.

“சிறிது  காலமாக   சகித்துக்  கொண்டிருந்தேன், மிகவும்   பொறுமை   காத்தேன்”,  என  அஸ்மின்   அந்தச்  சீனமொழி  நாளேட்டிடம்   கூறினார்.

பாஸுடன்   தொகுதி   பங்கீட்டுப்    பேச்சுகள்      நடத்தப்பட்டதாகவும்   அதனுடன்  இரகசிய  உடன்பாடு   செய்து  கொள்ளப்பட்டதாகவும்   கூறப்படுவதை    அவர்  மறுத்தார்.

2013  தேர்தல்களில்,   பக்கத்தான்   ஹரபான்   உறுப்புக்  கட்சி     என்ற   முறையில்   மக்களால்    தேர்ந்தெடுப்பட்ட  கட்சி    என்பதால்தான்    பாஸ்  சிலாங்கூர்  அரசில்    தொடர்ந்து    இடம்பெற்றிருப்பதற்கு    அனுமதித்ததாகவும்  அவர்  சொன்னார்.