காவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்

கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்.

1. இரு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் நதிகள் அனைத்திற்கும் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அவை தேசிய சொத்தாகும்.

2. காவிரி நீரை இரு மாநிலங்களும் தகுந்த முறையில் பிரித்துக்கொள்வதே சரியானதாக இருக்கும்.

3. தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரில் 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்.

4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி எம் சி தண்ணீரோடு, 14.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும்.

5. இந்த 14.75 டிஎம்சி நீரில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூர் நகரின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

6. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

7. கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மாற்றமில்லை.

8. காவிரி நீர் தொடர்பாக மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1892லும் 1924லும் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும்.

9. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுமார் 20 டிஎம்சி நீர் இருப்பதை காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.

10. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது.

-BBC

TAGS: