மசீச மலாய்- பெரும்பான்மை இடங்களை நாடுவது இயல்பே, ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை- டி

மசீச  பல  இனங்கள்  வாழும்   தொகுதிகளில்,  அதுவும்  மலாய்க்காரர்களைப்  பெரும்பான்மையாகக்  கொண்ட   தொகுதிகளில்   அதன்   தலைவர்களைக்  களமிறக்குவது  “இயல்பானதே”  என்கிறார்  அக்கட்சிப்   பேச்சாளர்   டி  லியான்  கெர்.

அது   டிஏபி-யைப்   போல்    அல்லாமல்     மசீசவை   மலாய்க்காரர்களில்   பெரும்பான்மையினர்  உள்பட   எல்லா  இனத்தவரும்   ஏற்றுக்கொள்கிறார்கள்   என்பதைக்  காண்பிக்கிறது.

“இதற்கு  முற்றிலும்   மாறாக  டிஏபி   பல்லினக்  கட்சி    என்று   கூறிக்கொண்டாலும்  மலாய்க்காரர்களும்    சீனர்களும்   சம  எண்ணிக்கையில்   வாழும்  பகுதிகளில்   போட்டியிட   அஞ்சுகிறது. அது  சீனர்களின்  அரசியல்  உணர்வுகளைத்   தூண்டிவிட்டு  அதை  வைத்தே   வாழ்கிறது”,   என  டி  ஓர்   அறிக்கையில்  கூறினார்.

பல்லினக்  கொள்கையைப்  பின்பற்றாததற்காக  டிஏபி  வெட்கப்பட   வேண்டும்  என்றாரவர்.

“கட்சித்   தேர்தல்களில்கூட   நாட்டின்  ‘பல்லின’  தன்மையையும்  உணர்வையும்  பிரதிபலிக்கும்   ஒரு  குழுவைத்   தேர்ந்தெடுக்க   டிஏபி     தவறிவிட்டது”,  என்று  டி  கூறினார்.