நைஜீரியா: பள்ளி தாக்குதலில் காணாமல்போன சில சிறுமிகள் மீட்பு

நைஜீரியாவின் வட பகுதியில் தங்கி படிக்கும் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் காணாமல் போன மாணவிகள் சிலர் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாப்ச்சி நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது, மாணவியரும், ஆசிரியைகளும் புதர்களில் மறைவதற்காக தப்பி சென்ற பின்னர், சுமார் 100 குழந்தைகள் காணாமல்போனதாக நம்பப்படுகிறது,

இந்த மாணவியர் டிரக்குகளில் ஏற்றி செல்லப்பட்டதை கண்டதாக பெற்றோர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

சிபோக் நகரிலுள்ள ஒரு பள்ளியில் இருந்து 270-க்கு மேலான மாணவியர் போகோ ஹராம் குழுவினரால் கடத்தப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. -BBC_Tamil