காவிரி விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தான 3 தீர்மானங்கள்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு குறித்து அனைத்து கட்சிகள் சார்பில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும்

  2. உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

  3. சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை ஆகும்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை விரைவில் சந்திப்பது, 177.25 டிஎம்சி தண்ணீரை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை நடத்தவது என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திப்பது என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: