புற்றுநோய் குறித்து ஆய்வு செய்ய இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 1.1 மில்லியன் டாலர் நிதி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவீன் வரதராஜன் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் டெக்சாஸ் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது.

நவீன் புற்றுநோயாளிகளுக்கு டி-செல் நோய் எதிர்ப்பு சிகிச்சையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். இந்த சிகிச்சையில், உடலில் உள்ள டி-செல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்களை செயலிக்க வைக்கின்றன. தனக்கு கிடைத்த தொகை மூலம் நோயாளிகளுக்கு புற்றுநோயை குணப்படுத்த உதவுவேன் என அவர் தெரிவித்தார்.

நவீனுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து வரும் மற்றொரு ஆராய்ச்சியாளர் சங்யுக் ஜங்கிற்கும் 8 லட்சம் டாலர் வழங்கியுள்ளனர். இவர் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

-athirvu.com