உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் இல்லை பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்,

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து, பாகிஸ்தானுக்கான நிதி உதவி மற்றும் ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வெளிப்படையாக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினாலும், உண்மையாக எந்தஒரு மாற்றமும் கிடையாது. உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஹக்கானி நெட்வோர்க் மற்றும் தலிபான் அமைப்புகள் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அமெரிக்கா அங்கு தொடர்ச்சியாக வான்வழி தாக்குதலையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கப்படுவது கிடையாது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களுடன் பேச்சுவார்த்தை அறிவிப்பு வெளியிட்டதும் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றது.

அமெரிக்க வெளியுறவு துறையின் ஆசிய பிராந்திய முதன்மை துணை செயலாளர் ஆலிஸ் பேசுகையில், ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கையில் பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால் பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்திய நிலையிலும், பயங்கரவாத ஒழிப்பில் அந்த நாட்டின் நிலைப்பாட்டில் உறுதியான, நிலையான மாற்றம் இல்லை. அவர்கள் தலீபான்கள் ஆதிக்கம் உள்ள இடங்களில் முக்கிய பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,

தலீபான்கள் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண்பதற்கு, பேச்சு நடத்தி, அந்த அமைப்பின் மீது நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் உதவ முடியும் என்று நம்புகிறோம் என கூறிஉள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்க அதிகமான நடவடிக்கையை எடுக்க பாகிஸ்தானுக்கு சாதகமான நிலை உள்ளது என பெண்டகன் கூறிஉள்ளது.

-dailythanthi.com