கு நான்: தண்ணீர் பிரச்சனைக்கு ஹரப்பான் மற்றவர்கள் மீது பழி போடுகிறது

 

சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மாநில மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலி மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருப்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நிராகரித்தார்.

அவர்கள் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். அது நாம் ஏதாவது நிர்மாணிக்க வேண்டும் என்றால் அவர்கள் என் மீது பலவித குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்றதாகும் என்றாரவர்.

நாம் மக்களுக்கு வேண்டியதைச் செய்கிறோம். அவர்கள் மக்களைப் பற்றி அக்கறைகொள்வதில்லை. அவர்கள் தங்கள்டைய நலன்களைக் கவனித்துகொள்கிறார்கள் என்று தெங்கு அட்னான் இன்று கெப்போங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று காலை மணி 7 அளவில், தண்ணீர் விநியோகம் கிட்டத்தட்ட 91.7 விழுக்காடு பூர்த்தியாகிவிட்டதாக ஷரிகாட் பெகாலான் ஆயர் சிலாங்கூர் (ஷபாஸ்) கூறியது.

இத்தண்ணீர் பிரச்சனைக்கு சிலாங்கூர் அரசு மீது பழி போடலாமா என்று நேற்று கேட்ட போது, அதற்கு மந்திரி பெசார் அஸ்மின் அலி, ‘உங்களுக்கு தெரியமிருந்தால், பிரதமர் மீது பழி போடுங்கள்” என்று கூறினார்.