நஜிப் பிஎன்பி பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரிம2,000 கொடுக்கிறார்

 

14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நஜிப் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட் (பிஎன்பி) பணியாளர்களுக்கு ஒரு-முறை மட்டும் ரொக்கப் பணம் கொடுப்பதாக இன்று அறிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பிஎன்பியின் 40 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நஜிப், கடந்த ஆண்டும்கூட பிஎன்பி பணியாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க அவர் ஒப்புதல் அளித்ததை நினைவுகூர்ந்தார்.

நாற்பதாம் ஆண்டு விழா ஒவ்வொரு நாளும் வருவதில்லை. ஆகவே, இந்த 40 ஆம் ஆண்டு விழாவை கொண்டாட பிஎன்பியின் ஒவ்வொரு பணியாளருக்கும் சிறப்பு ஊக்குவிப்பாக ரிம2,000-ஐ அறிவிக்கிறேன் என்று அங்கு குழுமியிருந்த 1,000 க்கு மேற்பட்ட பிஎன்பி பணியாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே நஜிப் கூறினார்.

மே மாதத்தில் இப்பணம் கொடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலும் மே மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.