சைட் சாடிக் மூவாரை முகைதினுக்கு விட்டுக் கொடுக்கத் தயார்

பெர்சத்து  இளைஞர்   தலைவர்   சைட்   சாடிக்  சைட் அப்துல்  ரஹ்மான்,  மூவார்மீது   கண்  வைத்திருந்தாலும்     கட்சித்    தலைவர்   முகைதின்  யாசின்    அங்குப்   போட்டியிட  விரும்பினால்    அத்தொகுதியை    விட்டுக்  கொடுக்கத்  தயாராக  இருக்கிறார்.

“முகைதின்   பாகோவில்   போட்டியிட்டாலும்   மூவாரில்    போட்டியிட்டாலும்  அவரை  100விழுக்காடு    ஆதரித்து    வெற்றி  பெற  வைப்பேன்”,  என்று   26-வயது   சாடிக்   நேற்று   மூவாரில்   சந்தித்தபோது   கூறினார்.

நேற்று    செய்தியாளர்   கூட்டமொன்றில்    பேசிய    முகைதின்  பாகோவைத்   தற்காப்பதா,  மூவாருக்குச்   சென்று   போட்டியிடுவதா    என்பதை    விரைவில்   அறிவிப்பதாகக்   கூறினார்.

சைட்  சாடிக்,   கட்சித்    தலைவரின்   செல்வாக்கு   ஓரிடத்தில்   மட்டும்தான்   என்று   இருந்துவிடக்கூடாது   என்றுரைத்தார்.  முகைதின்  மூவாரில்   போட்டியிட்டாலும்   பாகோவில்    அவருக்குச்  செல்வாக்கு   குறைந்து  விடாது   என்றார்.