இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகை பிடிக்கிறார்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்க புற்று நோய் கழகம் நடத்தியது.

அந்த ஆய்வு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. தினமும் இந்தியர்கள் புகைப்பிடிக்க சுமார் ரூ.2 கோடி செலவு செய்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தியாவில் வாரத்துக்கு 17,887 பேர் உயிரிழக்கிறார்கள்.

இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் சிறுவர், சிறுமியர்களிடமும் பரவியுள்ளது. தினமும் 6.25 கோடி சிறார்கள் புகை பிடிக்கிறார்கள்.

அவர்களில் சுமார் 4 லட்சத்து 29 ஆயிரத்து 500 பேர் சிறுவர்கள். 1 லட்சத்து 95 ஆயிரத்து 500 பேர் சிறுமிகள். தினமும் இந்த சிறுவர், சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் சிகரெட் புகைக்கிறார்கள்.

இந்தியாவில் புகை பிடிக்கும் பெரியவர்களில் சுமார் 9 கோடியே 3 லட்சம் பேர் ஆண்கள். சுமார் 1 கோடியே 34 லட்சம் பேர் பெண்கள்.

மொத்தத்தில் இந்தியாவில் சுமார் 17 கோடியே 10 லட்சத்து 94 ஆயிரத்து 600 பேர் தினமும் புகை பிடிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் சிகரெட், பீடி உற்பத்தி அதிகமாக உள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: