உங்கள் கருத்து: செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் மகாதிரைப் பாராட்ட வேண்டும்

உங்களுக்கு  வாக்களிப்பதும்   அன்வாருக்கு  வாக்களிப்பதும்   ஒன்றாகுமா? – ஒருவகையில்  ஒன்றுதான்  என்கிறார்  மகாதிர்

விஜிபி: முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்   முன்பு   அன்வார்  இப்ராகிமுக்கு  எதிராக     நடவடிக்கை  எடுத்ததற்கு  “வருத்தப்படுவதாக”க்  கூறியுள்ளார்.

அந்த     வகையில்   சமரசம்   செய்துகொண்டு  “அலிபாபாவையும்   அவரின் 40  திருடர்களையும்”  ஒழித்துக்கட்ட   வேண்டிய   நேரம்  வந்துவிட்டது.  எனவே,  மகாதிருக்கு   அளிக்கும்  வாக்கும்   அன்வாருக்கு   அளிக்கும்   வாக்கும்  ஒன்றுதான்.

கருத்துவேறுபாடுகளையும்  பகையையும்    மறப்போம்.  நாட்டின்   நன்மைக்காக   பிஎன்னுக்கு  முடிவு  கட்டுவோம்.

எச்பிலூய்: டாக்டர்  மகாதிருடன்   நீங்கள்  ஒத்துப்போகலாம்,  ஒத்துப்போகாமலும்   இருக்கலாம்.  ஆனால், கடந்த  காலச்  சம்பவங்களை  ஒப்புக்கொள்ளும்   அவரது   விவேகத்தை   மதிக்காமலிருக்க  முடியாது.

இதையே  30 மில்லியன்  பேரின்   தலைவிதியை   நிர்ணயிக்கும்   அதிகாரத்தைக்  கொண்டுள்ளவர்  பற்றிக்   கூற   முடியாது.   அவரைக்  கேட்டால்   அவருக்காக   மற்றவர்கள்தான்  “எதுவும்  இழக்கப்படவில்லை”.  “1எம்டிபி  ஓகே”,  ஜோ  லோ?  அது  யாரு”,  “எக்குவா….  எக்குவா…..என்ன?”,  எக்கோனோமிஸ்ட்   செய்தி  பொய்”,  அமெரிக்காவின்  எஃப்பிஐ   அன்புக்குரிய  பிரதமரைக்  கவிழ்க்கப் பார்க்கிறது”,   என்று  வாய்க்கு  வந்தபடி   உளறுகிறார்கள்.

ஸ்லீபி: என்னைக்  கேட்டால்   92-வயதானவரிடம்  நான்கு   விசயங்களைக்  கவனிக்க   வேண்டும்    என்பேன்.

1)  இப்போதைய    பிரதமரைப்போல்   அல்லாமல்   நேருக்கு  நேர்   சந்திக்கவோ,   கடுமையான   கேள்விகளுக்குப்    பதிலளிக்கவோ   தயங்குவதில்லை,

2) முன்னாள்   துணைப்  பிரதமர்   அன்வார்  இப்ராகிம்   தொடர்பில்   தவறாக  முடிவெடுத்ததைத்  துணிச்சலாக  ஒப்புக்கொள்கிறார்,

3) என்றென்றும்   பிரதமராக  இருக்கும்  நோக்கம்   அவருக்கு  இல்லை,

4) மக்கள்   முன்னோக்கித்தான்   பார்க்க  வேண்டுமே   தவிர  பின்னோக்கிப்  பார்க்கக்  கூடாது  என்கிறார்

பெயரிலி:  மகாதிரிடம்  சிறந்த   தலைவருக்குரிய  பண்புகளைப்  பார்க்கிறோம்.  செய்தியாளர்களைச்  சந்தித்து    எந்தக்  கேள்விக்கும்   பதிலளிக்கத்   தயாராக   இருக்கிறார்,  செய்தியாளர்களைச்  சந்திப்பதற்கு   அஞ்சி    தன்  சார்ப்பாக   தன்  துதிபாடிகளைப்   பேசச்  சொல்லும்   கோழை  அல்ல   அவர்.

துன்  அற்புதமான  மனிதர்.  92  வயதில்   ஓய்வெடுத்துக்கொண்டு   குடும்பத்தோடு   நேரத்தைச்   செலவிட்டுக்   கொண்டிருக்கலாம்.  ஆனால்,  அவரோ   தம்  காலத்தில்   செய்த   தவறுகளைத்   திருத்துவதற்காக  போராடுகிறார்.

அவரது  சாதனைகளும்   கண்ணெதிரே  பிரம்மாண்டமாகக்  காட்சி   அளிக்கின்றன.  நம்   நாட்டை  உலக  அளவில்   பிரபலமாக்கியவர்   அவர். இன்று  பிரிந்து  கிடக்கும்   பல்லினத்தவரையும்    அரசியல்வாதிகளியும்   ஒன்றிணைக்கும்   ஆற்றல்   கொண்ட   ஒரே   தலைவர்    அவர்தான்.  என்ன  துணிச்சல்    அவருக்கு,   வயது,  உடல்நிலை,  அரசியல்  நிலவரம்   அத்தனையும்    சாதகமாக  இல்லை   என்றாலும்   போராட   முன்வந்திருக்கிறாரே.