திருத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மீதான தீர்மானத்தை நிறுத்திவைக்க 10ஆயிரம் பேர் மனு

இன்று    மொத்தம்  107  பேர்  திருத்தப்பட்ட   தேர்தல்  தொகுதிகள்  மீதான   தேர்தல்   ஆணைய(இசி)    அறிக்கை   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யப்படுவதை    நிறுத்தக்  கோரி        ஷா   ஆலம்   உயர்   நீதிமன்றத்தில்   மனு  செய்து  கொண்டார்கள்.

மனு   செய்த   ஒவ்வொருவரும்   சிலாங்கூரில்  தொகுதிகள்  திருத்தி  அமைக்கப்பட்டதற்கு    ஆட்சேபனை   தெரிவிக்கும்   100  க்கு மேற்பட்ட  வாக்காளர்களைப்  பிரதிநிதிக்கிறார்கள்.

மனுதாரர்களில்    முன்னாள்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா,  சிலாங்கூர்  மாநிலச்   சட்டமன்றத்   தலைவர்   ஹன்னா  இயோ,   பெட்டாலிங்   ஜெயா   உத்தாரா   எம்பி  டோனி  புவா,   இன்னும்  பல   சட்டமன்ற  உறுப்பினர்கள்   உள்ளிட்டிருந்தனர்.

மொத்தத்தில்   அந்த  107பேரும்   10ஆயிரத்துக்கும்  மேற்பட்ட    சிலாங்கூர்   வாக்காளர்களைப்  பிரதிநிதிக்கிறார்கள்   என   பெர்சே   இடைக்காலத்   தலைவர்   ஷாருல்   அமான்  முகம்மட்  சாஆரி     செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.

“தேர்தல்  தொகுதிகள்  திருத்தி  அமைக்கப்பட்டதன்  மீதான  இறுதி   அறிக்கை   நாடாளுமன்றத்தில்  தாக்கல்    செய்யப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும்  அதன்மீது  வாக்களிப்பு   நடப்பதையும்  நிறுத்திவைக்க   தடுப்பாணை  பெறுவதற்கு  மனுச்  செய்திருக்கிறோம்”,  என்றாரவர்.