தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது!

தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் நியாய தன்மையை இன்று அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி .சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தந்தை செல்வா பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்..

தமிழர் விடுதலைப் போராட்டத்திலே நாம் மறக்க முடியாத ஒரு மனிதராக தந்தை செல்வாவை குறிப்பிடலாம். வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுபட்ட போது தமிழர்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம்.

ஆனால் வல்லாதிக்க சக்திகளின் கைகளில் இருந்து மாறி மீண்டும் சூடு காட்டிய என்னை சட்டிக்குள் விழுந்தது போல் சிங்கள பேரினவாத்தின் கீழ் எமது தமிழர்கள் அடிமை பட வேண்டிய நிலையே உருவாகி இருந்தது. அந்த கால கட்டத்தில்தான் சிங்கள தேசத்தின் அடக்கு முறையை எதிர்த்து தமிழர்களிற்கான ஒரு நியாயாதிக்கமான சுய நிர்ணய உரிமையுடன் வட, கிழக்கு இணைந்த ஒரு அரசை நிறுவ வேண்டும் என்ற அவாக்கொண்டு எழுந்தவர் தான் தந்தை செல்வா, அந்த ஏக்கம் முயற்சி இன்னும் விட்டு போகவில்லை அகிம்சை போராட்டமாக இருந்தது ஆயுத போராட்டமாக பரிணமித்தது, அது முள்ளி வாய்க்காலுடன் முற்று பெற்றது.

ஆரம்பத்தில் எமது விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க முற்பட்ட சிங்கள தேசம், பின்னர் புலிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை மூலம் சமாதான மேசையில் சர்வதேசத்தின் மத்தியஸ்துடன் பேச முன்வந்தது. அத்துடன் தமிழர்களின் விடுதலை போராட்டத்தையும் ஏற்றிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் நயவஞ்சமாக சர்வதேசத்தின் ஆதரவுடன் விடுதலை புலிகளை தோற்கடித்தார்கள், ஆனால் இன்றய நிலையில் தமிழர்களுடைய ஆயுத போராட்டம் நியாய பூர்வமானது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

எனவே நாம் மீண்டும் சம்பந்தன் ஐயாவின் தலைமையில் ஒரு அகிம்சை ரீதியில் ஜனநாயக ரீதியில் ராஜதந்திர ரீதியில் போராட முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் அத்துடன் மீண்டும் தமிழர்களை பல துண்டுகளாக உடைத்து விட தமிழ் தேசியத்துக்கு எதிராக பல சக்திகள் இங்கு கங்கணம் கட்டி நின்று கொண்டிருக்கின்றன.

அதையே சிங்கள தேசம் விரும்புகிறது, அவர்களது முயற்சியை உடைத்து மீண்டும் தமிழனாக ஒன்றாக ஒரே சக்தியாக ஒருமித்த குரலுடன் நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

-athirvu.com

TAGS: