செம்பகா இருக்கைக்கு நிக் அஸிசின் இரு மகன்களும் மோதக்கூடும்

 

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் காலஞ்சென்ற ஆன்மீகத் தலைவர் நிக் அசிஸின் மாநில செம்பகா தொகுதியில் அவரின் மகன்கள் இருவரும் மோதக்கூடும் என்ற ஊகங்கள் வலுவடைந்து வருகின்றன.

பாஸ் நிக் அப்டு நிக் அஸிசை (படத்தில், இடது) அத்தொகுதில் நிறுத்த யோசித்து வரும் வேளையில், அமனா அவரது அண்ணன் நிக் ஒமாரை (படத்தில் வலது) அங்கு வேட்பாளராக நிறுத்தக்கூடும்.

அமனாவில் நிக் ஒமார் சம்பந்தப்பட்டிருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து ஒரு முடிவு நாளை அறிவிக்கப்படலாம் என்று கிளந்தான் அமனா தலைவர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா கூறினார்.

செம்பகா தொகுதியை 1995 ஆம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளுக்கு நிக் அசிஸ் தம் வசம் வைத்திருந்தார். தற்போது அத்தொகுதியை அஹமட் ஃபாதான் பிரதிநிதிக்கிறார்.

நிக் அப்டு தற்போது பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பாஸின் மத்தியக் குழுவின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.

நிக் ஒமார் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஆனால், சமய உரைகள் நிகழ்த்தி விருகிறார்.