கூட்டரசுப் பிரதேச இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் உடன்படிக்கை கிடையாது, மசீச

 

மசீச அதன் பாரம்பரிய இருக்கைகளான பண்டார் துன் ரசாக் மற்றும் வங்சா மாஜூ ஆகிய இரண்டயும் விட்டுக்கொடுக்கும் சமாதான பேச்சுக்கே இடமில்லை என்று தொகுதித் தலைவர் சியு இன் கீன் வலியுறுத்திக் கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் மசீச போட்டியிட விரும்பும் ஐந்து கூட்டரசு பிரதேச தொகுதிகளிலிருந்து அது சற்றும் அசைந்து கொடுக்காது என்றாரவர்.

“பண்டார் துன் ரசாக் மசீசவின் பாரம்பரிய இருக்கையாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது” என்று கூறிய அவர், வங்சா மாஜுவும் அப்படித்தான் என்றார்.

பெடரல் பிரதேசத்தில் மசீசவுக்கு ஐந்து இருக்கின்றன. எங்களுக்கு இந்த ஐந்தும் மீண்டும் வேண்டும், கூடவும் இல்லை, குறைவாகவும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

எங்களிடமிருந்து எந்த உடன்படுக்கையும் இருக்காது. அதுதான் கூட்டரசுப் பிரதேச மசீசவின் நிலைப்பாடு என்று சியு இன் பண்டார் துன் ரசாக்கில் இன்று நடைபெற்ற ஒரு தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.