மகாதிர் லங்காவி வேட்பாளர், வான் அசிஸா அறிவித்தார்

 

பக்கத்தான் ஹரப்பானின் லங்காவி நாடாளுமன்ற வேட்பாளராக அக்கூட்டணியின் தலைவர் மகாதிர் முகமட்டை பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்றிரவி அறிவித்தார்.

5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட செராமாவில் வான் அசிஸா இந்த அறிவிப்பைச் செய்தார்.

முன்னதாக, பெர்சத்துவின் கெடாவுக்கான மாநில மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலை மகாதிர் வெளியிட்டார். ஆனால், லங்காவி பற்றி எதுவும் கூறவில்லை.

மகாதிர் அவரது இருக்கைக்கு திரும்பிச் செல்லிம் போது, குழப்பமடைந்த கூட்டத்தினர். “லங்காவி! லங்காவி!” என்று குரல் எழுப்பினர்.

பின்னர், வான் அசிஸா மேடைக்கு வந்து மகாதிர் லங்காவி வேட்பாளர் என்று கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே அறிவித்தார்.