தெலுக் இந்தானை வென்றால் இங்ஙாவுக்கு அமைச்சர் பதவி, குவான் எங் வாக்குறுதி

 

தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுயில் டிஎபியின் வேட்பாளராக போட்டியிட பேராக் டிஎபி தலைவர் இங்ஙா கோர் மிங் அறிவிக்கப்பட்டார். அவர் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்வுடன் மோத வேண்டியிருக்கும்.

இன்றிரவு பண்டார் பாரு தெலுக் இந்தானில் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் இந்த அறிவிப்பைச் செய்தார்.

புத்ரா ஜெயாவை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றினால், இங்ஙா பெடரல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறினார்.

இங்ஙா தைப்பிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 2008 ஆண்டிலிருந்து இருந்துள்ளார்.

கெராக்கான் தலைவர் மா தெலுக் இந்தானில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, ராஜா போமோ என்று அழைக்கப்படும் இப்ராகிம் மாட் ஸின் தெலுக் இந்தானில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

இன்றைய பெரித்தா ஹரியான் செய்திப்படி, இப்ராகிம் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியிலும் மன்ஜோய் மாநில சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவது நாளை அறிவிக்கப்படும்.