ரிம2.5 மில்லியன் அம்னோவிடமிருந்து வந்ததல்ல, ஒரு கொடையாளர் கொடுத்தது

பாஸ்  கட்சிக்குக்  கிடைக்கப்பெற்ற    ரிம1.5 மில்லியனும் ,  ரிம1  மில்லியனும்  நன்கொடையாகக்  கொடுக்கப்பட்ட   பணம்   என்று   பாஸ்   மத்திய    செயல்குழு  உறுப்பினர்   முகம்மட்  ஸுக்தி  மர்சுகி  விளக்கினார்.

அப்பணம்  அம்னோவிடமிருந்து   வந்தது   என்று   சிலர்   கூறுவதை    அவர்   மறுத்தார்.

“எத்தனையோ   அவதூறுகள்  அள்ளிவிடப்படுகின்றன.  ஆகக்  கடைசியாக   முன்னாள்  பாஸ்   தலைவர்   ஒருவர்   எங்களுக்கு  ரிம1.5 மில்லியனும்  ரிம1மில்லியனும்   கிடைக்கப்பெற்றதாகக்  கூறினார்.

“அது  தனிப்பட்ட   ஒருவர்  அளித்த    நன்கொடை.  அது  அம்னோ  பணமல்ல,,   அம்னோ   அலுவலகத்திலிருந்து  வந்ததல்ல”,  என  ஸுக்தி   நேற்று  ஷா  ஆலமில்   சினார்   ஹரியான்  ஏற்பாடு   செய்திருந்த   ஒரு   கருத்தரங்கில்   கூறினார்.