வங்காள தேச ஆவி வாக்காளர்கள், எச்சரிக்கிறார் மகாதிர்

 

குறைந்த எண்ணிக்கை வாக்குகளில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், நஜிப் வாக்குப் பெட்டிகளில் சட்டைரோத வாக்குகளை நிரப்பி ஏமாற்று வேலை செய்வார் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நேற்றிரவு நெகிரி செம்பிலான் பெல்டா ஜோஹோலில் நடந்த ஒரு செராமில் கூறினார்.

“வங்காள தேசிகள் கூட வாக்களிக்கக்கூடும்”, என்று அந்த செராமாவில் மகாதிர் கூறினார்.

மே 9 பொதுத் தேர்தல் வாக்களிப்பில் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தேர்தல் மோசடியைத் தவிர்க்க முடியும் என்றாரவர்.

2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அப்போதைய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மேற்கு மலேசியாவில் வாக்களிப்பதற்கு 40,000 வங்காள தேசிகள் கொண்டுவரப்படுவார்கள் என்று கூறியதாக சொல்லப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் வங்காள தேச ஆவி வாக்களர்கள் மே 9 தோன்றக்கூடும் என்று கூறுகிறார்.