டிஎபி சிலாங்கூர் வேட்பாளர்கள், அறுவர் புதியவர்கள்

 

14 ஆவது பொதுத் தேர்தல் டிஎபி சிலாங்கூரில் 4 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் 16 மாநில சட்டமன்ற இருக்கைகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது.

அதில் ஆறு புதுமுகங்கள் இருக்கிறார்கள். மாநில மத்திய குழுவின் உறுப்பினர் ரோனி மீண்டும் களம் இறங்குகிறார், சுங்கை பெலெக் தொகுதியில்.

2013 இல் வென்ற 15 இருக்கைகளுடன் பாஸ் கட்சியின் வசம் இருக்கும் டூசுன் துவா தொகுதியிலும் டிஎபி போட்டியிடும்.

இந்த அறிவிப்பை டிஎபி தலைமைச் செயலாளர் குவான் எங் இன்று செய்தார்.

வேட்பாளர் பட்டியல்:

நாடாளுமன்றம்: பாங்ஙி (முன்பு, செரடாங்) ஓங் கியன் மிங்; பூச்சோங் – கோபிந்த் சிங்; டாமன்சாரா (முன்பு பெட்டாலிங் ஜெயா உத்தாரா) டோனி புவா; கிள்ளான் – சார்ல்ஸ் சந்தியாகு.

மாநிலம்: செகின்சான் – இங் சுயி லிம்; தெராதி – பிரையன் லாய்; பாலகோங் – எடி இங்; செரி கெம்பாஙான் இயன் யோங் ஹியன் வா; கின்ராரா – இங் எஸ்ஸே ஹான்; சுபாங் ஜெயா – மைக்கல் இங்; புக்கிட் காசிங் – ரஜிவ் ரிஷியகரன்; கம்போங் துங்கு – லிம் யி வே; பண்டார் உத்தாமா (முன்பு டாமன்சாரா உத்தாமா) ஜமலியா ஜமாலுடின்; பண்டார் பாரு கிளாங் (முன்பு சுங்கை பினாங்) – தெங் சாங் கிம்; பண்டமரன் – டோனி லியோங்; கோட்டா கமுங் – வி. கணபதிராவ்; பந்திங் (முன்பு தெலுக் டத்துக்) லவ் வெங் சான்; சுங்கை பெலெக் – ரோனி லியு; டுசுன் துவா -ஏட்ரி பைஸால்.