லங்காவியில் மகாதிரை எதிர்த்து ஈக்காத்தானுக்குப் பதில் பாஸ் போட்டி

ககாசான்  செஜாத்ரா   லங்காவி   பாஸ்    தலைவர்    ஜுபிர்  அஹமட்டை    அதன்  லங்காவி   வேட்பாளராக    அறிவித்துள்ளது.  இதற்குமுன்   அங்கு  தேசிய  கூட்டணிக்  கட்சி (ஈக்காத்தான்)  வேட்பாளர்  ஒருவரைக்  களமிறக்கத்    திட்டமிடப்பட்டிருந்தது.

கெடா  பாஸ்    ஆணையர்   அஹமட்   பக்ருடின்    ஷேக்   பக்ருர்ரஸி  கோத்தா  சராங்   செமுட்டில்   இன்று   இந்த     அறிவிப்பைச்   செய்தார்.   ஈக்காட்தான்   அந்த   நாடாளுமன்றத்   தொகுதியில்   ஒரு   வேட்பாளரை   நிறுத்த       தயாராக  இல்லை  என்று    தெரிவித்த  பின்னரே    இம்முடிவு  செய்யப்பட்டதாக     அவர்   கூறினார்.