பினாங்கு ஆட்சிக்குழு பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டது

பினாங்கு   முதலமைச்சர்   செள  கொன்  இயோ,  11-பேரடங்கிய   பினாங்கு   ஆட்சிக்குழுவினரை  இன்று   அறிமுகப்படுத்தினார்.

11  பேரும்      பினாங்கு   ஆளுனர்   அப்துல்    ரஹ்மான்   அப்பாஸின்   அதிகாரப்பூர்வ   இல்லமான    ஸ்ரீமுத்தியாராவில்     பதவி  உறுதிமொழி   எடுத்துக்கொண்டார்கள்.

அதில்  பிகேஆர்   ஏற்கனவே   இருந்ததுபோல்   மூன்று   இடங்களைப்   பெற்றுள்ளது.  பினாங்  துங்கால்   சட்டமன்ற   உறுப்பினர்    ஜகியுடின்   அப்துல்   ரஹ்மான்   இஸ்லாமிய  விவகாரங்கள்,   தொழில்  மேம்பாடு,   சமூக   உறவு   ஆகியவற்றுக்குப்  பொறுப்பேற்றுள்ளார்.

இரண்டாவது   தவணை   செபராங்   ஜெயா    சட்டமன்ற   உறுப்பினரான  டாக்டர்   அபிப்  பஹார்டின்   ஏற்கனவே  வைத்திருந்த   விவசாயம்,  விவசாயம்- சார்ந்த   தொழில்கள்,   புறநகர்   மேம்பாடு,  சுகாதாரம்   ஆகிய  பொறுப்புகளைத்   தக்க  வைத்துக்  கொண்டுள்ளார்.  பத்து  மவுங்  சட்டமன்ற   உறுப்பினர்   அப்துல்  ஹாலிம்  உசேன்  உள்நாட்டு,  அனைத்துலக   வாணிக,  பயனீட்டாளர்  விவகாரங்கள்,  தொழில்முனைவர்   மேம்பாடு    ஆகியவற்றுக்குப்   பொறுப்பு.

அமனாவும்  பெர்சத்தும்   பினாங்கு   ஆட்சிக்குழுவில்   இடம்பெறவில்லை.

ஆட்சிக்குழுவில்   உள்ள  மற்ற  அனைவரும்   டிஏபி   சட்டமன்ற   உறுப்பினர்கள்.  அவர்களின்   பொறுப்புகளாவன: –

முதலமைச்சர்  செள  கொன்   இயோ (பாடாங்  கோத்தா)- நில  விவகாரம்,   மேம்பாடு,  போக்குவரத்து,   தகவல்,

துணை  முதல்வர் II  பி.இராமசாமி(பிறை)- மாநில  பொருளாதார  மேம்பாடு,  கல்வி,  மனிதவள  மேம்பாடு,  அறிவியல்,  தொழில்நுட்பம்,  புத்தாக்கம்,

சொங்  எங் (பாடாங்  லாலாங்)-  மகளிர்,  குடும்ப  மேம்பாடு,   இஸ்லாம்   தவிர்த்து  மற்ற   சமய  விவகாரங்கள்,

ஜக்தீப்   சிங்  டியோ( டத்தோ   கிராமாட்)-  ஊராட்சி,  வீடமைப்பு,  நகர,  கிராமப்புறத்  திட்டமிடல்,

பீ பூன்  போ  (சுங்கை  பியு)-  நலவளர்ச்சி,  பரிவான   சமுதாயம்,   சுற்றுச்சூழல்,

ஜைரில்   கீர்   ஜோகாரி (தஞ்சோங்   பூங்கா-)பொதுப்பணி,  பயனீடு,  வெள்ளக்கட்டுப்பாடு,

இயோ   சூன்  ஹின்( பாயா  தெருபோங்)-   சுற்றுலா,  மரபுடைமை,   பண்பாடு,  கலாச்சார   மேம்பாடு,

சூன்  லிப்  சீ  (பாகான்  டாலாம்)-   இளைஞர்,  விளையாட்டுகள்.