ரந்தாவ் வேட்பாளர் இசிக்கு எதிராக வழக்கு பதிவு

பிகேஆரின்   ரந்தாவ்   வேட்பாளர்    டாக்டர்   எஸ்.ஸ்ரீராம்,   ஏப்ரல்  28-இல்   முன்னாள்    நெகிரி   செம்பிலான்  மந்திரி   புசார்   முகம்மட்  ஹசானை   வெற்றியாளராக     அறிவித்த   தேர்தல்    ஆணைய(இசி)   முடிவுக்கு   எதிராக     வழக்கு    தொடுத்துள்ளார்.

முகம்மட்,   தேர்தல்   அதிகாரி   அமினோ   ஆகோஸ்  சுயுப்,  இசி   ஆகியோரை  எதிர்வாதிகளாக    அவர்   குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீராம்   தம்  மனுவில்,  14வது   பொதுத்   தேர்தலில்   சட்டமன்றத்துக்குப்   போட்டியிட   தான்  தகுதி   பெற்றிருந்ததாகக்   குறிப்பிட்டார்.

அந்த  வகையில்  வேட்பாளர்   நியமன    நாளன்று   அங்கு  இருவர்  போட்டியிடத்   தகுதி  பெற்றிந்தனர்.  தானும்  முகம்மட்டும்தான்   அவ்விருவர்  என்றவர்  மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  அமினோ  ஆகோஸ்,   அங்கு   முகம்மட்   போட்டியின்றி  வெற்றி  பெற்றார்   என்று    அறிவித்து   விட்டார்.