வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சிங்கப்பூர், நாளை மறுநாள்  12ம் தேதி தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்தநிலையில்  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூர் வந்துள்ளார். முன்னதாக  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்  சிங்கப்பூர் வந்தடைந்தார்.  இவர்களது பேச்சுவார்த்தை குறித்து உலக நாடுகள் அனைத்தும் இந்த சந்திப்பை கூர்ந்த கவனித்து வருகிறது.

வருகிற 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

-dailythanthi.com