‘ஷங்கர் முதல் வைரமுத்து வரை’… எல்லோரையும் கூண்டில் ஏற்றிய டிராஃபிக் ராமசாமி!

சென்னை: டிராஃபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் நீதிமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டனர். ஜிரீன் சிக்னல் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்கி இயக்கியுள்ள படம் டிராஃபிக் ராமசாமி. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்துள்ளார்.

சட்டப் போராட்டம் நடத்துபவரை பற்றிய படம் என்பதால், இசை வெளியீட்டு விழா மேடை நீதிமன்ற செட்டப்பில் அமைக்கப்பட்டிருந்தது. நீதி தேவதை சிலை, மேசை, சுத்தியல், குற்றவாளி கூண்டு என அனைத்துமே தத்ரூபமாக இருந்தன. விழாவில் கலந்துகொண்ட அனைவருமே, குற்றவாளி கூண்டில் நின்று தான் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை பற்றி தான் படம் பேசுகிறது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர், கவிபேரரசு வைரமுத்து, டிராஃபிக் ராமசாமி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், ரோகினி, அம்பிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

வந்திருந்த விருந்தினர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசையை அனைவரும் பாராட்டினர்.

-tamil.filmibeat.com