யாழில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல்; சண்டையைக் கண்டதும் குடல் தெறிக்க ஓட்டமெடுத்த பொலிஸ்..

யாழ் நகரில் குழு மோதல் ஒன்றைக் கண்ட போக்குவரத்துப் பொலிஸார் அவ்விடத்தைவிட்டு வேகமாக நழுவிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

இன்று காலை யாழ் நகரை அண்டிய பகுதியில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குறித்த மோதல் தொடர்ந்ததால் அப்பகுதி விதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சற்று தொலைவில் போக்குவரத்து பொலிசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர், குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்ததுடன் “உடனே சென்று மோதலை தடுத்து நிறுத்துங்கள், ஒரு இளைஞரை அடித்தே கொல்லப்போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

எந்த பக்கம் மோதல் இடம்பெறுகிறது என பொலிசார் அந்த நபரிடம் கேட்டுள்ளனர். அவர் மோதல் இடம்பெறும் திசையை காட்டியுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் நின்ற பொலிஸர் மோதல் இடம்பெறும் திசை நோக்கி மெதுவாக சென்றுள்ளனர். பின்னர் திடீரென மோட்டார்சைக்கிளை திருப்பி குறித்த திசைக்கு எதிர்த் திசையாக அதி வேகமாக அப்பகுதியை விட்டு சென்றுள்ளனர். பொலிஸாரிடம் முறையிட்ட குறித்த நபர் ஆச்சரியத்துடன் செய்வதறியாது அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: