‘நஜிப் கடனைப் பெருக்கி வைத்துள்ள வேளையில் சிறுவன் கடனைக் குறைக்க உதவினான்’: சிறுவனுக்கு கிட் சியாங் புகழாரம்

முன்னாள்    பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்   நாட்டுப்பற்று  பற்றியும்   தேசிய  கடனைக்  குறைப்பதற்குச்  செய்ய   வேண்டியது  என்ன   என்பது   பற்றியும்  12-வயது   சிறுவனிடம்   பாடம்   கற்றுக்கொள்ள   வேண்டும்   என  டிஏபி   ஆலோசகர்   லிம்   கிட்   சியாங்   கூறினார்.

சிறுவன்   நாட்டின்    கடனைக்  குறைப்பதற்கு  தன்னால்   முடிந்த  உதவியைச்   செய்ய   முன்வந்துள்ளான்   ஆனால்  நஜிப்     தேசிய   கடனை  ரிம1ட்ரில்லியனாக  உயர்த்தி   வைத்துள்ளார்  என   லிம்  கூறினார்.

நஜிப்   ராய்ட்டர்ஸுக்கு  வழங்கிய    நேர்காணல்   ஒன்றில்,   1எம்டிபி   பணம்   கையாடப்பட்டது  தமக்குத்   தெரியாது   என்றும்   தெரிந்திருந்தால்  உடனே   நடவடிக்கை   எடுக்கப்பட்டிருக்கும்    என்று   கூறியிருப்பது   குறித்துக்   கருத்துரைத்தபோது   லிம்    அவ்வாறு   கூறினார்.

“ராய்ட்டர்ஸுக்கு   நஜிப்   வழங்கிய    நேர்காணலைப்   படித்தபோது   நாட்டுப்பற்று    என்றால்    என்னவென்று  முன்னாள்  பிரதமருக்கு   உணர்த்துவதுபோல்   அமைந்த    12-வயது   சிறுவன்  எர்வின்   தேவதாசனின்   செய்கைதான்   எனக்கு   நினைவுக்கு   வந்தது.

“நஜிப்  மிதமிஞ்சிய   செலவுகளாலும்    1எம்டிபி   ஊழலாலும்   நாட்டின்  கடனை  ரிம1ட்ரில்லியனாக   உயர்த்தி   வைத்துள்ள   வேளையில்   12-வயது  சிறுவன்   எர்வின்   கடனைக்  குறைப்பதற்கு   உதவியாக   டிரம்ப்   செட்    வாங்குவதற்காக     சேமித்து  வைத்திருந்த   ரிம214. 60   சென்னை    அப்படியே   தானம்   செய்திருக்கிறான்.

“எப்படிப்   பார்த்தாலும்   எர்வினுக்கு   முன்னாள்   பிரதமரைவிட     நாட்டுப்பற்று   அதிகம்”,  என  லிம்   குறிப்பிட்டார்.