மைத்திரியைப் புறக்கணித்த கூட்டமைப்பு?

ஸ்ரீ லங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

நிகழ்வுக்கான அழைப்பிதழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாண ஜனாதிபதி விசேட செயலணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்தச் செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முற்பகல் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதில் பங்கேற்கவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், அவரது அமைச்சர்கள் குழாமுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவே கொழும்புக்கு வந்துவிட்டனர் என்று அறியமுடிந்தது.

-athirvu.in

TAGS: