டிஏபியின் இங்காவுக்கு அமைச்சரவையில் இடமில்லையாம்

பக்கத்தான்  ஹரப்பான்  அமைச்சரவைப்  பட்டியலில்  பேராக்  டிஏபி   தலைவர்  இங்கா   கொர்  மிங்  இடம்பெற  மாட்டாராம்

டிஏபி    வட்டாரங்களிலிருந்து   கிடைத்த    தகவல்   இது.  டிஏபி   அனைத்துலக   செயலாளர்  தியோ   நை  சிங்-கைப்போலவே   இங்காவுக்கும்   அமைச்சர்   பதவி  கிடைக்காதாம்.

“முதலில்  தியோவுக்குத்   துணை  அமைச்சர்  பதவி   கிடைக்கலாம்   என்று  கேள்விப்பட்டோம்,   ஆனால்    அது  அவருக்குக்  கிடைக்கவில்லை.

“இப்போது   இங்காவும்  பட்டியலில்  இடமில்லை”,  என்று   ஒரு  வட்டாரம்   மலேசியாகினியிடம்   தெரிவித்தது.

தெலோக்  இந்தான்  எம்பியான   இங்காவுக்கு  அமைச்சர்  பதவி   கொடுப்பதில்லை  என்பது  பிரதமர்  டாக்டர்    மகாதிர்  முகம்மட்டின்  முடிவு   என  மலேசியாகினியிடம்   பேசிய   இன்னொரு    வட்டாரம்   தெரிவித்தது.

“(இங்காவுக்கு)  அமைச்சர்  பதவியோ   துணை  அமைச்சர்   பதவியோ   கிடையாது    என்பதில்  மகாதிர்   உறுதியாக   இருக்கிறார்”,  என்று   அது   கூறியது.