நாளை மகாதிரின் 93 ஆவது பிறந்த நாள்

 

2003 ஆம் ஆண்டில் தமது 78 ஆவது வயதில் டாக்டர் மகாதிர் முகமட் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

மீண்டும் நாட்டின் பிரதமராகியிருக்கும் மகாதிர் நாளை அவரது 93 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மகாதிரின் இச்சாதனை அரசியலில் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. அச்சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கிறது.

இன்று காலையிலிருந்து மகாதிருக்கு மலேசியாகினி ஆயிரக்கணக்கான நல்வாழ்த்துகளைப் பெற்று வருகிறது.

மலேசியர்கள் நாட்டை நல்வழி நடத்தும் பொறுப்பை மகாதிரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களை ஏமாற்றமடையச் செய்ய மாட்டார் என்று நம்புவோம்.