மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்


மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்

பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளைக் கூடுதலாக பெற்றிருக்கலாம் ஆனால், அவர்கள் எல்லாருமே கருத்தைச் சொல்வதில் திறன் பெற்றவர்கள் என்றோ  வாதம் செய்வதில் வல்லவர்கள் என்றோ சொல்லவியலாது என்று கிளந்தான் அம்னோ தொடர்புத் தலைவரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான முஸ்தபா முகம்மட் கூறுகிறார்.

“பக்காத்தானில் பலர் முகத்தைக் காட்ட மட்டுமே நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்.  அவர்களிடம் மலாய்க்கார எம்பிகள் நிறைய இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எண்ணிக்கை அதிகம் இருந்து என்ன… கருத்தைச் சரியாக எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டாமா”, என்று அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சருமான முஸ்தபா குறிப்பிட்டதாக இன்றைய சினார் ஹராபான் கூறியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோவின் மலாய்க்கார எம்பிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு அக்கட்சியில் மலாய்க்காரர்களுக்காக போராடுவதில் வேகம் குறைந்து விட்டதுதான் காரணம் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.

அம்னோ, மலாய்க்காரர்களின் நலனுக்காக எப்போதும் போராடி வந்துள்ளது, தொடர்ந்து போராடும் என்றாரவர்.

பக்காத்தானின் முயற்சியால் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக முஸ்தபா அவ்வாறு கூறினார்.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: