உலகின் அதிக வயதான ஜப்பான் மூதாட்டி மரணம்


உலகின் அதிக வயதான ஜப்பான் மூதாட்டி மரணம்

Koto Okuboடோக்கியோ: உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்ற ஜப்பான் பாட்டி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 115. உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி.

115 வயதான இவர் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கருதப்பட்டார்.

24.12.1897-ல் பிறந்த இவர் கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 27 நாட்களாக கோட்டோ ஒக்குபோதான் உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றிருந்தார். இந்தநிலையில் சில நாட்களாக காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவாசாக்கியில் உள்ள மருத்துவமனையில் திங்கட்கிழமை உயிரிழந்தார். இதனை இவரது பேத்தி தெரிவித்துள்ளார்.

இவருக்குப்பின் உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை, மத்திய ஜப்பானில் உள்ள கியோட்டோ பகுதியில் வாழ்ந்து வரும் ஜிரோமன் கிமுரா (115 வயது) என்பவரை சென்றடைந்துள்ளது. இவர் கோட்டோ ஒக்குபோவை விட சில மாதங்கள்தான் வயது குறைவானர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: