‘லண்டனில் உள்ள என் புதல்வி செமினியில் ஒரு வாக்காளர்’

Ramaஅண்மையில் பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி, காஜாங்கில் உள்ள தமது குடும்ப வீட்டுக்குச் சென்றிருந்த போது ‘சிலாங்கூரை நேசியுங்கள்’ என்ற பிரதமருடைய கடிதம் அங்கு அனுப்பப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படையவில்லை.

ஆனால் அந்தக் கடிதத்தை அணுக்கமாக ஆராய்ந்த போது தமது 25 வயது புதல்வு ஸ்ரீ வைதேகிக்கு முகவரியிடப்பட்டிருந்ததை அவர் பார்த்தார். ஸ்ரீ வைதேகி லண்டனில் முனைவர் பட்டப் படிப்பை படித்து வருகிறார்.

அதனால் ராமசாமி நஜிப்பை குறை கூறியதுடன் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் “மோசடியாக பதிவு செய்கின்றது” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஸ்ரீ வைதேகியின் வாக்களிப்பு மய்யம் செமினி என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“என்ன நடக்கிறது ? நான் வாக்காளராக பதிவு செய்து கொள்ளவே இல்லை என என் புதல்வி சொல்கிறார் !”  என இன்று பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“இது தேர்தல் ஆணையமும் நஜிப்பும் நடத்தும் மோசடியாகும். என் புதல்வியை பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு செய்ய அழகான அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தியுள்ளார்.”

“அந்த விவகாரம் தொடர்பில் நான் என் புதல்வி சார்பில் போலீசில் புகார் செய்வேன்.”

யார் தமது புதல்வியை வாக்காளராகப் பதிவு செய்தார் என்பதற்கான ஆதாரத்தை இசி வழங்க வேண்டும் என ராமசாமி விரும்புகிறார். மலேசியாவில் இயல்பான வாக்காளர் பதிவு இல்லாத வேளையில் அவர் இல்லாமல் அவருடைய அடையாளக் கார்டு வழங்கப்பட்டு இது எவ்வாறு நிகழ்ந்தது எனவும் அவர் அறிய விரும்புகிறார்.

நஜிப் தமது கடிதத்தில் ஸ்ரீ வைதேகிக்கு ‘Happy 2013′ என வாழ்த்துச் சொல்லியதுடன் பக்காத்தான் ராக்யாட்டையும் சாடியுள்ளார்.

 

TAGS: