பிகேஆர் எம்பி-யிடம் மன்னிப்பு கேள் : உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

1caseஉத்துசான் மலேசியா நாளேடு, இந்திரா மக்கோத்தா எம்பி அஸான் இஸ்மாயில்மீது அவதூறு கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அஸான் இஸ்மாயில் பிகேஆரில் வகித்த எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகியதுடன் அக்கட்சியைவிட்டும் வெளியேறி இருப்பதாக அந்நாளேடு செய்தி வெளியிட்டதற்காக இத்தண்டனை விதிக்கப்பட்டது.

1case1பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் தொடுத்த அவதூறு வழக்கின் தொடர்பில் இரு தரப்பும் நீதிபதி ஹுயு சியு கெங் முன்னிலையில் ஒரு சமரசத் தீர்வைச் செய்துகொண்டன.

அஸானைச் சந்தித்தபோது அவர் (வலம்), உத்துசான் மலேசியாவை வெளியிடும் உத்துசான் மலேசியா (ம) பெர்ஹாட் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.

ஆனால், இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க மறுத்தார்.

“நாளேடு பகிரங்க மன்னிப்பை வெளியிடுவதுடன் சரியான செய்தியையும் பிரசுரிக்க வேண்டும். இரண்டையும் ஏழு நாள்களுக்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பணித்துள்ளது”, என்றார்.

அது செய்யப்பட்டதும் வழக்கு திரும்பப் பெற்றுகொள்ளப்படும் என்று அஸான் கூறினார்.

TAGS: