நஸ்ரி : தெரு ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலா தொழில் பாதிப்புறவில்லை

tourismமலேசியாவில் அண்மைக்காலமாக “சட்டவிரோத” தெரு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அதனால் சுற்றுலா தொழில் பாதிக்கப்படவில்லை என்கிறார் புதிய சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.

“சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, சுற்றுலா வருமானமும் கூடி வருகிறது. எனவே, அதனால் பாதிப்பு இல்லை என்றே நினைக்கிறேன்”, என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் நஸ்ரி தெரிவித்தார்.

tourism1சுற்றுலா புள்ளிவிவரங்கள்,  தெரு ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலா தொழிலுக்குப் பாதிப்பு இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன.

“ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. 2003-ஐ தவிர மற்ற ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை ஏறுமுகமாகத்தான் இருந்துள்ளது. அந்த ஆண்டில் சார்ஸ் நோய், உலகப் பொருளாதாரச் சுணக்கம் போன்ற காரணங்களால் எண்ணிக்கை குறைந்தது.

“2008-இலிருந்து இதுவரை எத்தனையோ சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையோ சுற்றுலா துறை வருமானமோ குறையவில்லை”, என்றாரவர்.

 

TAGS: