KLIA2ன் கட்டுமானச் செலவுகள் : ஏர் ஏசியா விடுத்த அறைகூவலை டிஏபி ஆதரிக்கிறது

KLIA2KLIA2 முனையத்தைக் கட்டுவதற்கான செலவுகள் கூடிக் கொண்டே போவது  பற்றியும் அதன் கட்டுமானத்தில் பல முறை தாமதங்கள் ஏற்பட்டுள்ளது பற்றியும்  புலனாய்வு செய்ய சுயேச்சைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனத்  தெரிவிக்கப்பட்ட யோசனையை டிஏபி ஆதரித்துள்ளது.

அந்த முழு விவகாரம் மீது இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின்  ஹுசேன் மௌனமாக இருப்பது குறித்தும் டிஏபி பிரச்சாரப் பிரிவுச் செயலாளர்  டோனி புவா கேள்வி எழுப்பினார்.

சுயேச்சை குழுவை அமைக்க வேண்டும் என ஏர் ஏசியா தலைமை நிர்வாக  அதிகாரி ஐரின் ஒமார் தெரிவித்த யோசனையை ஆதரிக்குமாறும் அவர்  அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.KLIA21

யோசனை கூறப்பட்டுள்ளது போல அத்தகைய குழு அமைக்கப்பட்டால் அது  திட்டத்தின் முன்னேற்றம், முழுமை பெறும் தேதி, மொத்தச் செலவுகள் ஆகிய  முக்கிய மூன்று விஷயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர்  விரும்புகிறார்.

“தாமதங்களுக்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படா விட்டால் ஏர் ஏசியா  மீதும் குத்தகையாளர்கள் மீதும் தொடர்ந்து பழி போடப்படும்,” என ஐரின்  சொன்னார்.

KLIA2ன் கட்டுமானத்தில் தாமதங்கள் ஏற்படுவதை மலேசிய ஏர்போர்ட்ஸ்  ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) மே மாதத் தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட  பின்னர் ஐரின் அந்த வேண்டுகோளை விடுத்தார்.

2009ம் ஆண்டு அந்தத் திட்டத்துக்கான குத்தகை வழங்கப்பட்டது முதல் அது பல  பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றது. அதனால் தொடக்கத்தில் 1.7 பில்லியன்  ரிங்கிட் என மதிப்பிடப்பட்ட அதன் செலவுகள் கடந்த ஆண்டு 4 பில்லியன்  ரிங்கிட்டாக அதிகரித்தது.

தொடக்கத்தில் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் KLIA2 தயாராகி விடும் என  அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது கால வரம்பின்றி தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. குத்தகையாளர் நிர்ணயிக்கும் தேதியை பின்பற்றப் போவதாக  MAHB அறிவித்துள்ளது.

 

TAGS: