உத்துசானுக்கு எதிரான வழக்கில் நிஜாருக்கு வெற்றி

perakWWW1 கார் எண்பலகை விவகாரம் தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் பேராக்கின் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின் வெற்றி பெற்றார். அவருக்கு இழப்பீடாக ரிம250,000 வழங்க உத்துசானுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வழக்குச் செலவாக ரிம30,000 கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ரோஸ்னானி சவுப் உத்தரவிட்டார்.

 

TAGS: